யாழ்.அனலைதீவில் ஆலயத்தின் ஒலிபெருக்கியை ஒலிபரப்ப மின்னிணைப்பை ஏற்படுத்தியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

2 months ago



யாழ்.அனலைதீவில் ஆலயத்தின் ஒலிபெருக்கியை ஒலிபரப்ப மின்னிணைப்பை ஏற்படுத்தியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இச்சம்பவம் அனலைதீவில் ஆலயம் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

இதில், அனலைதீவு 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நடராசா துஷ்யந்தன் (வயது 37) என்பவரே உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

அந்தப் பகுதியிலுள்ள ஆலயம்    ஒன்றில் பாடலை ஒலிபரப்புவதற்காக மின்னிணைப்பு பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்.

அந்தச் சமயம் மின்சாரத்தால்       தாக்குண்ட அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவரின் சடலம் உடல்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைய பதிவுகள்