
போதைப்பொருள் காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 40 ஆயிரம் பேர் இன்னமும் உயிரிழக்கின்றனர் என்று தேசிய ஆபத்தான மருந்துக் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் அதன் தலைவர் ஷக்ய நாணயக்கார தெரிவிக்கையில், போதைப்பொருள் பாவனையிலிருந்து பிள்ளை களைப் பாதுகாப்பதில் பெற்றோரின் பொறுப்பு மிக அவசியம்.
புகையிலை, மதுபானம் மற்றும் போதைப் பொருள் பாவனையால் இலங்கையில் வருடாந்தம் சுமார் 40,000 பேர் உயிரிழக்கின்றனர்.
அவர்களில் புகையிலைப் பாவனையால் சுமார் 20,000 பேரும், மதுப்பாவனையால் 18,000 பேரும், மற்ற போதைப்பொருள் பாவனையால் சுமார் 2,000 பேரும் உயிரிழக்கின்றனர்.
போதைப்பொருள் பாவனை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான ஆலோசனைகளை 1927 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் - என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
