இலங்கைக்கு நிலையானதொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கு ஆதரவு வழங்குவதில் உறுதியாக உள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு.
புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கை மக்களுக்கு நிலையானதொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஆதரவு வழங்குவதில் உறுதியாக உள்ளதாக அமெரிக்கா அறிவித் துள்ளது.
இலங்கையின் 2024 ஜனாதிபதித் தேர்தல் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டு அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவின் தலைவர் பென் கார்டின் இதனைத் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதுடன், ஆளுகை, ஊழல் எதிர்ப்பு, மனித உரிமைகள் மற்றும் கடந்தகால அநீதிகளுக்குப் பொறுப்புக் கூறல் ஆகியவற்றில் உண்மையான முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் அவசரப் பணியை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், ஜனநாயக மற்றும் பொருளாதார ரீதியாக நிலையான எதிர்காலத்தை நாடுவதற்கு இலங்கை மக்களுக்காக ஆதரவளிப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதாக பென் கார்டின் மேலும் குறிப்பிட்டார்.