2022–2023 நிதியாண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்-73.3 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளது என்று நிதியமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அண்மைய வரவு செலவுத்திட்ட நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 2021ஆம் ஆண்டின் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நட்டம் 56 வீதத்தால் குறைந்துள்ளது.
சுற்றுலாத்துறையின் வளர்ச்சியுடன் விமானப் பயணிகளின் வருமானம் 293.3 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதேவேளை விமான நிறுவனத்தை நிதி ரீதியாக, நிலையானதாக மாற்றும் வகையில், புதிய முதலீட்டாளர்களை உள்வாங்க, அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.