யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்கரையில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

7 hours ago



யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்கரையில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை கரையொதுங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் அதேவேளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொதுமக்களின் உதவியோடு மிதவையை மீட்கும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கரையொதுங்கிய மிதவையை இராணுவம், கடற்படை, பொதுமக்கள் என பலர் பார்வையிட்டு வருகின்றனர். 

அண்மைக் காலமாக வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் மிதக்கும் கூடாரங்கள், மிதவைகள் போன்றன கரையொதுங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்