இலங்கையில் தேர்தல் தொடர்பில் சமூக ஊடக மீறல்களை கையாள்வது குறித்து பொலிஸ் நிலையங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்.
4 months ago
தேர்தல்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் இடம்பெறும் மீறல்களை கையாள்வது குறித்து பொலிஸ் நிலையங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் பரப்புரைகளின் பிரதான தளமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ளன. வேட்பாளர்களை இலக்கு வைத்து விமர்சனங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கும் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் கூறப்படுகின்றது.
இந்தச் சூழ்நிலையில் சமூக ஊடகங்கள் தொடர்பான முறைப்பாடுகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த வழிகாட்டுதல்களை பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கியுள்ளது. சர்ச்சைக்குரிய பதிவுகள் மற்றும் அவற்றை நீக் குவது தொடர்பிலும் பொலிஸ் தலைமையகம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.