ஒன்று கூடுவதற்கு எதிரான சட்டங்கள் உரிமையை பாதிக்கின்றன ஜ.நா சுட்டிக்காட்டு

6 months ago

2023 ஜனவரி முதல் 2024 ஜனவரி வரையான ஒரு வருடகாலத்தில் இலங்கையிலும் ஒன்றுகூடுவதற்கான உரிமையைப் பாதிக்கக்கூடிய வகையிலும், அதனை மட்டுப்படுத்தக்கூடிய விதத்திலும் சட்டங்களும், வழிகாட்டல்களும் உருவாக்கப்பட்டுள்ளன என ஐ.நா. விசேட அறிக்கையாளர் க்ளெமென்ற நியலெற்றொஸி வோல் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடருக்கு சமர்ப்பித்த அறிக்கையில், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களைப் பாதுகாப்பதானது தற்கால சவால்களைக் கையாள்வதில் சிவில் சமூகத்தின் வகிபாகத்தை மேம் படுத்துவதற்கு இன்றியமையாததாகும்.

அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய நடவடிக்கையை உலகநாடுகளின் அரசாங்கங்கள் முன்னெடுக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.