மத்திய கிழக்கிற்கு ஏவுகணைகளை செலுத்தக்கூடிய நீர்மூழ்கிகளை அனுப்புமாறு அமெரிக்க உத்தரவு.

4 months ago


ஈரான் அடுத்த சில நாட்களில் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து மத்திய கிழக்கிற்கு ஏவுகணைகளை செலுத்தக்கூடிய நீர்மூழ்கிகளை அனுப்புமாறு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் உத்தரவிட்டுள்ளார்.

பென்டகன் இதனை தெரிவித்துள்ளது.

எவ்35 போர் விமானங்களுடன் கூடிய யுஎஸ்எஸ் ஏபிரஹாம் லிங்கனை மத்திய கிழக்கிற்கு வேகமாக செல்லுமாறும் அன்டனி பிளிங்கென் உத்தரவிட்டுள்ளார்

இதேவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளருடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டுள்ள இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ்கலன்ட் ஈரானின் இராணுவ தயாரிப்புகள் அந்த நாடு இஸ்ரேலிற்கு எதிராக பாரிய தாக்குதலை திட்டமிடுவதை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலை பாதுகாப்பதற்காக அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுப்பது குறித்த தனது அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ள அன்டனி பிளிங்கென் அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில் மத்திய கிழக்கில் அமெரிக்கா படையினரை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பிராந்திய ஸ்திரதன்மையை உறுதி செய்வதற்காக இஸ்ரேலிற்கு எதிராக பொருத்தமான தடுக்கும் நடவடிக்கையை எடுப்பதற்கான உரிமை ஈரானிற்குள்ளது என ஈரானின் பதில் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.