கொழும்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் மீது புகை குண்டு வீச்சு நடத்தப்பட்டது.
கொழும்பில் நேற்று அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னெடுத்த போராட்டத்தின்மீது தண்ணீர் தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சு நடத்தப்பட்டது.
இதனால், கோட்டை, ஜனாதிபதி செயலக பகுதிகளில் பெரும் பதற்றநிலை காணப்பட்டது.
சம்பள உயர்வு, சம்பள நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அதிபர்கள், ஆசிரியர் சங்கங்கள் நேற்று புதன்கிழமை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அழைப்பின் பேரில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்துக்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் அதிபர்கள். ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பெரும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
கோட்டை புகையிரத நிலையத்துக்கு அண்மையாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி பொலிஸாரின் தடைகளை மீறி ஜனாதிபதி செயலகத்தை நோக்கி முன்னேறியது.
இதையடுத்து, அங்கு குவித்திருந்த பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் பேரணியை தடுத்து நிறுத்துவதற்காக தண்ணீர் தாரை பிரயோகம் செய்ததுடன் கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர்.
தொடர்ந்து அந்தப் பகுதியில் பெரும் பதற்றநிலை நிலவியது.