தமிழர் தாயகத்தின் பல பகுதி களிலும் இன்று கறுப்பு ஜூலையின் 41 ஆவது நினை வேந்தல் கடைப்பிடிக்கப்படுகின்றது.
தமிழர் தாயகத்தின் பல பகுதி களிலும் இன்று கறுப்பு ஜூலையின் 41 ஆவது நினை வேந்தல் கடைப்பிடிக்கப்படுகின்றது.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதே நாள்களில் கொழும்பிலும் தெற்கின் இதரப் பகுதிகளிலும் தமிழர்களுக்கு எதிராக மிகப்பெரும் கலவரங்கள் முன்னெடுக்கப்பட்டன. திருநெல்வேலி தபால் பெட்டிச் சந்தியில், புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதையடுத்து ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கலவரங்கள் கொழும்பில் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிரைப் பறித்தன.
எட்டு நாள்கள் வரையில் தொடர்ந்த இந்தத் தாக்குதலில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்ததுடன், 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். வரலாற்றின் 'கறுப்பு ஜூலை' என்று அறியப்படும் இந்தப் படுகொலைகளில் 41ஆவது நினைவேந்தல் இம்முறையும் தமிழர் தாயகத்தின் பல பகுதிகளிலும் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தப்படுகின்றது.