கனடாவில் எதிர்வரும் மாதங்களில் வீடுகளின் விலைகள் குறை வடையும் சாத்தியங்கள் காணப்படு கின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் வீட்டு அடகுக் கடன் தொகை வெகுவாக அதிகரித்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் வீட்டு உரிமையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்க நேரிட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் அதிக எண்ணிக்கையான வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடு களை விற்பனை செய்வதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஒரு தசாப்த காலத்தில் பாதிவாகாத அளவிற்கு தற்பொழுது வீட்டு விற்பனை குறித்த பட்டியல்க ளில் பல வீடுகள் விற்பனைக்காக பட்டியலிடப்படுகின்றன எனக் கூறப்படுகின்றது.
வீடுகளுக்கான நிரம்பல் அதி கரிக்கும் நிலையில் வீட்டு விலை களில் வீழ்ச்சி ஏற்படக் கூடும் என வீட்டுமனை சந்தை நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
அடகுக் கடன் தொகை அதிகரிப் பினை சமாளிக்க முடியாத கார ணத்தினால் வீடுகள் இவ்வாறு விற் பனை செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
