அவுஸ்திரேலிய நீதிமன்றம் துஷ்பிரயோக வழக்கில் இலங்கை இராஜதந்திர அதிகாரி திருமதி ஹிமாலி அருணதிலகவுக்கு அபராதம்

3 weeks ago





இலங்கை இராஜதந்திர                  அதிகாரியான திருமதி ஹிமாலி அருணதிலகவுக்கு          ஆஸ்திரேலியாவின் பெடரல் நீதிமன்றத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதி தூதுவர் திருமதி ஹிமாலி              அருணதிலக தனது வீட்டுப் பணிப் பெண் பிரியங்கா தனரத்னவை துஷ்பிரயோகம் செய்த                      குற்றத்துக்காக பெடரல்            நீதிமன்றத்தால் அவருக்கு 117,028.80 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த குறித்த ஊழியர் 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை கன்பரா வீட்டில் பணியாற்றியதாக வெளிநாட்டு ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

திருமதி ஹிமாலி அருண திலக தனது பணியாளருக்கு உரிய முறையில் சம்பளம் வழங்கவில்லை எனவும், அதற்கான அபராதத் தொகையை 60 நாட்களுக்குள் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பிரியங்க தனரத்னவுக்கு 374,151.90 டொலர் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது.

ஹிமாலி அருணதிலக தற்போது ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக உள்ளார். 

அண்மைய பதிவுகள்