வெள்ளம் வீட்டைச் சுற்றி பாம்புகள், சீர்செய்தால் வீடு செல்வோம்.-- யாழ்.வட்டு இந்துக் கல்லூரியில் தங்கியவர்கள் தெரிவிப்பு
4 months ago

வெள்ளம் வீட்டைச் சுற்றி பாம்புகள், சீர்செய்தால் வீடு செல்வோம்.-- யாழ்.வட்டு இந்துக் கல்லூரியில் தங்கியவர்கள் தெரிவிப்பு
வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர்.
இவர்கள் சங்கானைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, ஜே- 57 கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிப்பவர்கள்.
தமது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாகவும், வீட்டைச் சுற்றி பாம்புகள் உள்ளதாகவும் தெரிவித்த அவர்கள், இவற்றை எல்லாம் சீர்செய்து வழங்கினால் மட்டுமே தங்களால் வீடுகளுக்குச் செல்ல முடியும் என்றும் தெரிவித்தனர்.
இந்தப் பிரச்சினை ஒவ்வொரு வருடமும் இடம்பெறுவதாகவும், இதற்கு ஒரு தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
