இலங்கையின் கடன் நிலுவை 100.18 பில்லியன் டொலர், கடன் வட்டி 6.4 பில்லியன் டொலர்

6 months ago

இலங்கையின் மொத்தக் கடன் நிலுவை 100.18 பில்லியன் டொலர் எனவும் செலுத்தப்படாத கடனுக்கான வட்டி 6.4 பில்லியன் டொலர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டின் இறுதியில் 96.17 பில்லியன் டொலராகக் காணப்பட்ட கடன் நிலுவை தவறான நிதி திட்டமிடல்கள் காரணமாக 100.18 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

2023ஆம் ஆண்டின் இறுதியில் 12.63 பில்லியன் டொலராகக் காணப்பட்ட உள்நாட்டுக் கடன் நிலுவை இந்த வருடத்தின் முதல் மாதங்களில் 12.92 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

உள்நாட்டுக் கடனுக்கான வட்டி 2.45 பில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜப்பான், சீன உதவித் திட்டங்களும் கடனாகவே வழங்கப்பட்டுள்ளன.