யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் நாகதம்பிரான் ஆலயத்தில் அமைக்கப்படவுள்ள பஞ்சதள இராஜகோபுரத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு எதிர்வரும் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு இடம் பெறவுள்ளது.
அன்று அதிகாலை 5.30 மணிக்கு விநாயகர் வழிபாடு இடம்பெற்று கணபதி ஹோமம், சாந்தி, சங்குப்பூசையைத் தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு சங்கு ஸ்தாபனம் ஆரம்பமாகி நடைபெறும்.
தங்கள் கைகளால் சங்கு ஸ்தாபனம் செய்யும் அடியார்கள் 10 ஆயிரம் ரூபாவை காணிக்கையாக வழங்கி சங்கு ஸ்தாபனம் செய்யலாம் என ஆலயத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.