முஸ்லிம் பயிலுநர், உத்தியோகத்தர்கள் தொழுகைக்கு செல்ல அனுமதி மறுப்பு! நிந்தவூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
நிந்தவூர் மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தில் முஸ்லிம் பயிலுநர்களையும் உத்தியோகத்தர்களையும் தொழு கைக்கு பள்ளிவாசல் செல்ல தடை விதித்தது மற்றும் பயிற்சி, ஏனைய நடவடிக்கைகள் சீரான முறையில் இயங்கவில்லை எனக் கூறி மாவட்ட பிரதிப் பணிப்பாளரின் நடை முறையை கண்டித்து, பயிலுநர்கள் நேற்றுக்காலை நிந்தவூர் தொழில் பயிற்சி நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குறிப்பிடும் போது, கடந்த வியாழக்கிழமை தொழில்பயிற்சி நிலையத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாண வர்களாகிய எங்களை இங்கு தலைமை வகிக்கும் ரி. வினோ தராஜா என்ற பிரதிப் பணிப்பாளர் ஜூம்மா தொழுகைக்கு மற்றும் எந்த தொழுகைக்கும் செல்ல அனுமதிக்க முடியாது என காலைக் கூட்டத்தில் எங்களுக்கு அறிவித்து இங்கு கடமை புரியும் சகோதர தமிழ் இனத் தைச் சேர்ந்த காவலாளி ஊடாக வெள்ளிக்கிழமையன்று ஜூம்மா தொழுகைக்காக சென்றவேளை பிரதான நுழைவாயிலை மூடி தொழுக்காக செல்ல விடாமல் தடுத்ததன் காரணமாக முறுகல் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் இங்கு கட மையாற்றும் முஹம்மட் நசீர் என்பவர் தலையிட்டு நுழைவா யிலை திறந்து எங்களை இறுதி நேரத்தில் தொழுகைக்கு செல்ல அனுமதி பெற்றுத் தந்தார்.
இவ்வாறான ஒரு நிர்வாகத்தின் கீழ் முஸ்லிம்களின் உரிமைகளில் கைவைத்து தடை விதிக்கின்ற இனவாத செயல்பாடுகளை துடைத்தெறிந்து எமது உரிமைகள் பெற்றுத் தரப்பட வேண்டும்.
நாம் இதற்கு முன் பல இடங்களில் பயிற்சிகளை மேற்கொண் டிருக்கின்றோம். அங்கு ஜூம்மா நேரத்துக்கு தொழுகைக்கு செல் லாவிட்டால் சகல முஸ்லிம் மாணவர்களையும் தொழுகைக்காக விரட்டிவிடுவார்கள். அந்தளவுக்கு நல்ல மற்ற மதத்தை மதிக்கின்ற பண்பாடு ஏனைய இடங்களில் இருக்கின்ற நிலையில் இங்கு உரிமை மறுக்கப்படுகின்றது.
எனவே, நிந்தவூர் தொழுகைக்குச் செல்ல வேண்டாமென்பது மன வேதனையைத் தருவதோடு, நிந்தவூரின் உலமாக்கள். புத்திஜீவிகள், அரசியல்வாதிகள் மற்றும் ஊர்வாழ் மக்களாகிய அனைவரும் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து தீர்வினை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, குறித்த இடத்துக்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இந்த விடயமாக உரியவர்களிடம் பேசி தீர்வை பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்தனர்.