போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தவிருந்த மூவர் இந்தியாவில் கைது

6 months ago

40 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான மெத்தம் பெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தவிருந்த 3 இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் மேலும் 6 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சென்னைப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள் அவர்களை கைது செய்ததன் ஊடாக, மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் குழு ஒன்று பிடிபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

புழல் மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர் இந்தக் குழுவை வழிநடத்தி வந்தமையும் தெரியவந்துள்ளது.

அவர்கள் கடந்த ஜூன் மாதம் 11ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாகக் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.