
பூமிக்கு அருகில் உள்ள புதன் கிரகத்தில் வைரம் அதிக அளவில் இருக்க வாய்ப்பு இருப்பதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளன.
சூரிய குடும்பத்தில் முதலாவதாக உள்ள கிரகம் புதன். 3ஆவது இடத்தில் உள்ள பூமிக்கு அருகில் உள்ளது. இந்த நிலையில், சீனா மற்றும் பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், புதன் கிரகத்தில் படிந்துள்ள வைரங்கள் பற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.
புதன் கிரகத்தில் மேற்பரப்பில் கார்பன், சிலிக்கா மற்றும் இரும்பு கலவை இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், இவற்றுக்கு அடியில் வைர அடுக்குகள் இருக்க வாய்ப்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதீத வெப்பநிலை மற்றும் அழுத்தம் காரணமாக தரைப் பரப்புக்கு கீழே உள்ள கார்பன், வைரக்கட்டிகளாக மாறியிருக்க வாய்ப்பு உள்ளது.
ஏராளமான வைரம் இருப்பதால் மனிதர்கள் புதன் கிரகத்துக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
