தமிழ் எம்.பிக்களுக்கு மட்டும் நிதிவிடுவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது

7 months ago

யாழ்.மாவட்ட அபிவிருத்திக்காக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின்பேரில் ஜனாதிபதி அலுவலகத்தால் விசேட நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாவட்ட செயலகத்தில் திட்டமிடல் பிரிவால் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவருக்கும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்கும் விசேட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனுக்கு 146 திட்டங்களை யாழ்.மாவட்டத்தின் 11 பிரதேச செயலர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்த 47 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் 97 திட்டங்களை யாழ். மாவட்டத்தின் 13 பிரதேச செயலர் பிரிவுகளில் நிறைவேற்றுவதற்காக 21.450 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் யாழ். மாவட்டத்தில் 14 திட்டங்களை நிறைவேற்றுவதற்காக 25 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு ஒதுக்கப்பட்ட நிதி எத்தனை பிரதேச செயலர் பிரிவுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று இந்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்திவரும் நிலையில், ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் வழங்காது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இந்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் விசேட நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளமை சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

அண்மைய பதிவுகள்