இலங்கை கடந்த 26 மாதங்களில் பெற்ற கடன் தொகையைப் பார்த்தால், மக்கள் தினமும் 6.5 பில்லியன் ரூபா கடனாளியாகினர். பேராசிரியர் வசந்த அத்துக்கோரள தெரிவிப்பு.

கடந்த 26 மாதங்களில் நாட்டின் ஆட்சியாளர்கள் பெற்ற கடன் தொகையை வைத்துப் பார்க்கும்போது, நாட்டு மக்கள் தினமும் 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளாக மாறியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.
நாடு கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக புதிய பொருளாதார சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
ஒவ்வொரு மாதமும் இந் நாட்டு மக்கள் 196 பில்லியன் ரூபா கடனாளிகளாக்கப்பட்டுள்ளனர். நாம் ஒவ்வொரு நாளும் 6.5 பில்லியன் ரூபா கடனில் உள்ளோம். இவ்வாறான கடன் தொடர்பில் இலங்கை தற்போது கடும் நெருக்கடியில் உள்ளது.
அதேவேளை, 2021 ஆம் ஆண்டு நாட்டின் பண வீக்கத்துடன் ஒப்பிடுகையில், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் சுமார் 106 வீதம் அதிகரித்துள்ளது.
எங்கள் உணவு வகைகளில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் சுமார் 138 வீதம் அதிகரித்துள்ளது. அதன்படி, நாங்கள் மிகவும் விலை உயர்ந்த நிலையில் வாழ்கிறோம்.
இந்தப் பின்னணியில் பொருளாதார நிலை குறித்து திருப்தி அடைய முடியாது.
ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி இந்த நிலைமைகளை சரியாகப் புரிந்துகொண்டு ஏதாவது ஒரு வகையில் தொடர் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மிகக் குறுகிய காலத்தில் சில சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது அவசியமாக இருக்கலாம்.
அதன் மூலம் மக்கள் பொருளாதார ரீதியாக உயரத் தேவையான பின்னணியை உருவாக்கும் திறன் பெறவேண்டும் - என்றார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
