கனடாவின் பிரதமராக நீடிப்பேன் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிப்பு.

6 months ago

கனடாவின் பிரதமராக தொடர்ந்தும் நீடிப்பதில் தாம் உறுதியுடன் உள்ளேன் என ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

டொரன்டோ சென்-போல்ஸ் இடைத்தேர்தல் முடிவுகளின் பின்னர் தமது பதவி குறித்து பலவிதமான கருத்துக்கள் வெளிவருவதைத் தாம் அறிந்திருக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோல்வி ஒன்றைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் வெளிவருவது சகஜமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடா தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த கனடா ஒன்றை கட்டியெழுப்புவதற்காக ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைக்கின்றார் எனவும், அடுத்த கனடா

தினத்திற்காகவும், மேலும் பல கனடா தினத்திற்காகவும் தாம் ஆவலுடன் காத்திருக்கின்றார் எனவும் அவர் கூறியுள்ளார்.


அண்மைய பதிவுகள்