ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் முரண் உள்ளன. இதுதொடர்பிலான அரச சிக்கல் தீர்க்கப்படும் வரை தேர்தலுக்கான திகதி அறிவிப்பை ஒத்திவைப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வர்த்தகரும் சட்டத்துறை பட்டதாரியுமான சி.டி.லீனா இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு ஜூலை 8ஆம் திகதி முதல் ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளை இந்த மனுவால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் பாதிப்படையாதென சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
