இந்தியப் பிரதமர் மோடியும், ரணில் விக்கிரமசிங்கவும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்தியப் பிரதமர் மோடியும், இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் விரைவில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போதே, அவருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையில், இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு பெரும் இழுபறியைச் சந்தித்துள்ளது.
ஜனாதி பதி அநுர தலைமையிலான இலங்கை அரசாங்கம் சீனாவின் பக்கம் செல்வதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன.
இவ்வாறான பின்னணியிலேயே, ரணிலுக்கும் மோடிக்கும் இடையிலான சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை மிகவும் நம்பிக்கைக்குரிய இலங்கைத் தலைவராக முன்னாள் ஜனாதிபதி ரணில் காணப்படுகின்றார்.
ரணிலின் தலைமையில் இலங்கையைப் பொருளாதாரப் பின்னடைவுக்குள் இருந்து மீட்பதற்காக இந்தியா ஏராளமான உதவிகளைச் செய்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
