IMF இற்கும் இலங்கைக்கும் இடையில் இணக்கம் காணப்பட்ட வேலைத்திட்டத்தின் நோக்கங்களுக்கு எதிர்காலத்திலும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மைக் காலத்தில் இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இணக்கம் காணப்பட்ட வேலைத்திட்டத்தின் நோக்கங்களுக்கு எதிர்காலத்திலும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான உடன்படிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளதா என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அதன் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கொசாக் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் வலுவாக உள்ளது. முயற்சிகள் பலனைத் தருகின்றன.
பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு. பணவீக்கம் குறைகிறது. கையிருப்பு மற்றும் சர்வதேச இருப்புக்கள் அதிகரித்து வருகின்றன.வருமானம் வலுவடைகிறது.
ஆனால் இன்னும் சில அபாயங்கள் உள்ளன. எனவே, அதைத் தக்க வைத்துக்கொள்வது முக்கியம். முதலாவதாக, எதிர்வரும் தேர்தல் உண்மையில் இலங்கை மக்கள் தீர்மானிக்க வேண்டிய ஒன்று. வரலாற்றில் மிக மோசமான நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு IMF திட்டத்தின் இலக்குகளை அடைவதே இலங்கையின் முன்னுரிமையாகும்.
நாடு முழுவதுமாக நெருக்கடியில் இருந்து இன்னும் விடுபடவில்லை'' என தெரிவித்தார்.
மேலும் IMF திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு செப்டம்பர் 21 க்குப் பிறகு புதிய அரசாங்கத்துடன் விவாதிக்கப்படும் என்று ஜூலி கோசாக் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
