தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டால் அநுரவுடன் சேர்ந்து செல்லத் தயார். க. வி. விக்னேஸ்வரன் தெரிவிப்பு

2 months ago



தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அநுரகுமார திஸ நாயக்க தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டால் அவர்களுடன் சேர்ந்து முன் செல்லத் தயாராகவுள்ளோம் என்று தமிழ் மக்கள் கூட்ட ணியின் செயலாளர் நாயகம் க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட வாறு கூறினார்.

மேலும், வடக்கு, கிழக்கில் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்தனர்.

அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கின்றது என்பதை அநுர குமார அரசு உண்மையில் ஏற்றுக்கொண்டால் அரசுடன் சேர்ந்து முன்செல்லத் தயாராக இருக்கின்றோம்.

தமிழ் அரசுக் கட்சி முன்னர் இருந்த பலரும் தற்போது அந்தக் கட்சிக்குள் இப்போது நடைபெறும் சம்பவங்கள் காரணமாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

அதிலும் பலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மனவருத்தத்தில்  உள்ளனர்.

இதனால் ஒரு சிலர் வெவ்வேறு கட்சிகளுடன் இணைந்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியினர் அதிகளவான இளைஞர்களை உள்ளீர்த்தமை போன்று நாமும் இளைஞர்களை உள்ளீர்த்துப் பலமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம் - என்றார். 

அண்மைய பதிவுகள்