பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்படி, அவர் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடமாட்டார்.
உடல்நிலை மற்றும் அரசியலில் ஈடுபடுவதற்காக நாடு முழுவதும் பயணம் செய்வதால் ஏற்படும் சிரமங்களை அடிப்படையாகக் கொண்டே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
எனினும், அவர் வரும் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றிக்காக வியூகம் அமைப்பதிலும் பிரசாரங்களிலும் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.