விளையாடுவதற்காக இலங்கை வந்த நியூஸிலாந்து கிரிக்கெட் அணி மின்னேரியா தேசிய பூங்காவிற்கு விஜயம்
2 months ago
இரண்டு ரி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலும் விளையாடுவதற்காக நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை வந்துள்ளது.
கடந்த நவம்பர் 04 மற்றும் நேற்றையதினம் (06) இரு குழுக்களாக அவ்வணி இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில், இன்றையதினம் இலங்கையின் மின்னேரியா தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்திருந்தது.
இரு அணிகளும் மோதும் 2 ரி20 போட்டிகள் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 09, 10ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.
3 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் முதலாவது போட்டி தம்புள்ளையிலும் ஏனைய 2 போட்டிகளும் பல்லேகல மைதானத்திலும் இடம்பெறவுள்ளன.