அனுரவின் யாழ்ப்பாண கூட்டத்திற்கு தென்னிலங்கையில் இருந்து வந்த ஒருவரை காட்டுங்கள் சந்திரசேகரன் சவால்

அனுரவின் யாழ்ப்பாண கூட்டத்திற்கு தென்னிலங்கையில் இருந்து வந்த ஒருவரை காட்டுங்கள்.
யாழில் இளைஞர், யுவதிகள் மத்தியில் அனுரவுக்கான ஆதரவு பெருகியுள்ளது.
உங்களால் இப்படியொரு கூட்டத்தை நடத்த முடியாது என அக்கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று(10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
அனுரவின் கூட்டத்தால் கட்சிகள் குழம்பிப் போயுள்ளனர். அவர்களது கூட்டத்திற்கு மக்கள் வருவதில்லை இதனால் சுமந்திரன் அதிகமாக கலக்கமடைந்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி என்ற மதிப்புமிக்க பதவியில் இருந்துகொண்டு "அனுரவின் யாழ்ப்பாணம் பாஷையூர் கூட்டத்திற்கு தென்னிலங்கையில் இருந்து பேருந்துகளில் மக்கள் அழைத்து வரப்பட்டதாக"
கீழ்த்தரமான முறையில் கருத்து வெளியிடுவது அழகல்ல. இது பாஷையூர் மக்களை கேவலப்படுத்துவது ஆகும்.
முடியமாக இருந்தால் அனுரவின் யாழ்ப்பாண கூட்டத்திற்கு தென்னிலங்கையில் இருந்து வந்த ஒருவரை காட்டுங்கள்.
யாழில் இளைஞர், யுவதிகள் மத்தியில் அனுரவுக்கான ஆதரவு பெருகியுள்ளது.
உங்களால் இப்படியொரு கூட்டத்தை நடத்த முடியாது.இவ்வாறு கீழ்த்தரமான கதைகளை சொல்லாதீர்கள்
நேற்று நடைபெற்ற பாஷையூர் கூட்டத்திற்கு தென்னிலங்கையில் ஓருவர் வந்தது என்பதை நிரூபிக்க முடியுமா என சவால் விட்டார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
