புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் பராமரிக்கப்படும்.--அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு
புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் பராமரிக்கப்படும் என அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று(22) பாராளுமன்றில் தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில்-
பயங்கரவாத தடைச் சட்டம் என்பது அரசாங்கத்தின் விருப்பமோ கொள்கையோ அல்ல.
புதிய சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் வரை நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் மிகயவும் பாதுகாப்பாக பராமரிக்கப்படும்.
புதிய சட்டமொன்று நிறைவேற்றப்படும் வரை அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவை உள்ளது.
அது தொடர்பாக நீதியமைச்சர் காரணிகளை முன்வைத்திருந்தார் அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விமான
நிலையத்தில் எதிர்நோக்கிய அசௌகரியத்துக்கு வருந்துகிறோம்.
இந்த விடயம் தொடர்பாக தற்போதே எனக்கு அறியக் கிடைத்தது. விமான சேவைகள் நிறுவனத் தலைவரிடம் இந்த விடயம் தொடர்பாக அறிக்கை கோரியுள்ளேன்.
அதுபோல் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவிடமும் நான் இந்த விடயம் தொடர்பாக அறிவுறுத்தியுள்ளேன்.
சிறீதரனின் பாராளுமன்ற வரப்பிரசாதங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் - என்றார்.