
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைவாக யாழ். மாவட்டத்தின் காற்றின் தரத்தை ஆராயும் பணிகள் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை முதல் தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் வளிமாசு தொடர்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் பிரகாரம் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு யாழ். மாவட்டத்தின் வளியின் தரத்தைக் கணித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடந்த வருட இறுதியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே இருந்த மூன்று வளித்தர கண்காணிப்பு நிலையங்களுக்கு மேலாக புதிதாக மூன்று வளித்தர கண்காணிப்பு நிலையங்கள் கடந்த 2024 டிசெம்பர் மாதம் நிறுவப்பட்டிருந்தன.
கடந்த மாதம் அவதானிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் நவம்பர் மாதம் 28 ஆம் திகதியே வளிமாசு அதிகளவில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து அது குறைவடைந்து வருவதாக கடந்த ஜனவரி 2 ஆம் திகதி மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை முதல் ஒரு மாதம் வரையில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கென மேலதிகமாக 13 வளித் தர நிலையங்கள் யாழ்.மாவட்டத் தில் அமைக்கப்படவுள்ளது.
அதன் பிரகாரம் சாவகச்சேரி வலய கல்வி அலுவலகம்,மருதங்கேணி பிரதேச செயலகம்,பருத்தித்துறை பிரதேச சபையின் குடத்தனை உப அலுவலகம், கரவெட்டி வலிகிழக்கு பிரதேச சபை உப அலுவலகம், அராலி பிரதேச சபை உப அலு வலகம், வேலனை பிரதேச சபை மற்றும் பழைய பூங்கா யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச சபை ஆகிய 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மேலும் நான்கு இடங்களில் சனிக்கிழமை அமைக்கப்படவுள்ளது.
மேலும் பழைய தபால் நிலைய வளாகத்திலும் நடமாடும் வளித்தர நிர்ணய நிலையம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது..
மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணியாளர்கள் அதிகாரிகள் 8 பேர் இதற்காக விசே மாக பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
வளிமாசு தொடர்பில் ஒரு மாத கால அறிக்கை பெறப்பட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
