இலங்கையர்களினதும் இலங்கை செல்பவர்களினதும் பாதுகாப்புக்கு அமெரிக்கா இலங்கையுடன் இணைந்து செயற்படும்.-- அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு

2 months ago




இலங்கையர்களினதும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்பவர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அமெரிக்கா இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்து செயற்படுகின்றது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களிற்கு தீர்வைக் காண்பதில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து நான் பெருமிதம் கொள்கின்றேன்.

அமெரிக்கா இலங்கை குறித்து போக்குவரத்து தடை எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்

இலங்கையில் உள்ள அனைத்து அமெரிக்கர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய தனது கடமையை வலியுறுத்தியுள்ள அவர் நம்பகதன்மை மிக்க பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து தூதரக பணியாளர்கள், அமெரிக்க பிரஜைகள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவும் நாடு ஆகிய தரப்புடன் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் எச்சரிக்கும் கடமை கொள்கை குறித்த ஆணைபற்றியும் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் எங்கள் தூதரகங்கள் எச்சரிப்பதற்கான கடமை என்ற கொள்கையின் அடிப்படையில் செயற்படுகின்றன,

அதாவது நம்பகத்தன்மை குறித்த எச்சரிக்கை கிடைத்தால் நாங்கள் எங்கள் பிரஜைகள் மற்றும் அந்த நாட்டின் அதிகாரிகளுடன் அந்த தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இது அமெரிக்கா பின்பற்றும் உலகளாவிய நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார்.

அறுகம்குடாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்பட்டதும் நாங்கள் அது குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்தோம்,

இலங்கை அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்தது என ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

நாளாந்த அடிப்படையில் நாங்கள் அவர்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுகின்றோம்,

இலங்கையின் அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடனான கூட்டாண்மை குறித்து நாங்கள் பெருமிதம் அடைகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த இலங்கை அரசாங்கத்தினதும் பாதுகாப்பு அதிகாரினதும் அர்ப்பணிப்பு குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மறுஅறிவித்தல் வரும் வரை அறுகம்குடாவிற்கு செல்லவேண்டாம் என அமெரிக்கர்களிற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியான பாதுகாப்பு மற்றும் ஸ்திரதன்மையின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.


அண்மைய பதிவுகள்