அபிவிருத்தி செய்யும் நோக்கில் பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கு சொந்தமான காணியை வடக்குக்கு நேற்று வருகை தந்த முதலீட்டு மேம்பாடு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பார்வையிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 4 அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக வருகை தந்திருந்த அவர்
பரந்தன் இரசாயன தொழிற்சாலை இருந்த பகுதியையும் பார்வையிட்டுள்ளார்.
பரந்தன் இரசாயன தொழிற் சாலைக்கு சொந்தமான 230 ஏக்கர காணியை விசேட முதலீட்டு ஊக்கு விப்பு வலயமாக உருவாக்கத் திட்டமி டப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
இராஜாங்க அமைச்சருடன் கிளி நொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், அமைச்சின் அதிகாரிகள், கண்டாவளை பிரதேச செயலாளர் ரி. பிருந்தாகரன், கிராம சேவகர், கண்டாவளை பிரதேச செயலக காணி பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.