மருத்துவ பிரிவின் ஊசி மருந்து கொள்வனவில் அரசுக்கு 97 மில்லியன் ரூபாய் நட்டம்.--நீதிமன்றில் அறிக்கை தாக்கல்
6 months ago

கடந்த வருடம் மருத்துவ விநியோகப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஊசி மருந்து குப்பிகள் கொள்வனவினூடாக, அரசாங்கத்துக்கு 97 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், லெக்டியு லோஸ் மில்லிமீற்றர் 120 என்ற குறித்த மருந்தைக் கொள்வனவு செய்யும்போது இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நாயகம் லக்மினி கிரிஹாகம தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய இம்யூனோ குளோபுலின் ஊசி மருந்து குப்பிகளைக் கொள்வனவு செய்த போது, மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளராக இருந்த கபில விக்ரமநாயக்கவின் நிர்வாகத்தின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
