யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹொரோயினுடன் இளைஞன் கைது

1 month ago




யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல். சூரிய பண்டாரவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைதினம் காலை ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 120 மில்லி கிராம் ஹொரோயினுடன் 28 வயது இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைய பதிவுகள்