யாழ்.நகர்ப் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றின் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்ததால் கைக்குழந்தையுடன் வெள்ளத்தில் தவித்த குடும்பத்தை பாதுகாப்பான இடத்துக்கு யாழ். ஊடக அமையத்தினர் அனுப்பி வைத்தனர்.
நேற்று (27) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
15 பேர் அடங்கிய ஒரு குடும்பம் யாழ்.இராசாவின் தோட்டப் பகுதியில் சிறிய வீட்டில் வசித்து வந்தனர்.
கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு வீட்டுக்குள் இறங்கியது. என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த குடும்பத்துக்கு வேறோர் இடத்துக்கு செல்வதற்கு யாழ்.ஊடக அமையம் வாகன வசதியை ஏற்படுத்தி கொடுத்தனர்.
மேலும் அவர்களின் செலவுகளுக்கு சிறு தொகை பணமும் வழங்கி பாதுகாப்பான இடத்துக்கு யாழ்.ஊடக அமையம் அனுப்பி வைத்தது.