தமிழக மீன்வர்களிடமிருந்து கைப்பற்றி தடுத்து வைத்த 13 படகுகளைக் கடற்படையினரின் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவு

1 month ago




இலங்கைக் கடற்பிரதேசத்துக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்துக்காகத் தமிழக மீன்வர்களிடமிருந்து                கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 படகுகளைக் கடற்படையினரின் பயன்பாட்டுக்காக வழங்குமாறு புதிய ஆட்சிப்பீடம் உத்தரவிட்டுள்ளது. 

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய சமயம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மன்னார் மற்றும் மயிலிட்டித் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருக்கும்- நல்ல நிலையில் உள்ள படகுகளையே கடற்படையினரிடம்                கையளிக்குமாறு கடற்றொரில் நீரியல்வளத்துறை பணிப்பாளர் பணித்துள்ளார்.

கடற்றொழில் திணைக்களப்      பணிப்பாளர் எல்.ஜி.ஆர்.இசுராணி ஒப்பமிட்டு இந்த உத்தரவை மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கமைய மன்னாரில் இருந்து 5 படகுகளும், யாழ்ப்பாணத்தில் இருந்து 8 படகுகளும் என மொத்தம் 13 படகுகள் கடற்படையினரின் பாவனைக்காக வழங்கப்படவுள்ளன.

IND/TN/08/MM.346, IND/TN/08/m.MM.1872, IND/TN/08/MM/1436, IND/TN/06/MM/6824, IND/TN/10/MM/693, IND/TN/10/MM/405, IND/TN/10/MM/2573,                IND/TN/11/ MM/857, IND/TN/11/MM/298,                IND/TN/11/MM/28, IND/TN/16/MM/1872,                                  IND/TN/16/MM/1861

ஆகிய இலக்கப் படகுகளுடன் 13 படகுகள் கடற்படையின்      பயன்பாட்டுக்கு வழங்கப் பணிக்கப்பட்டுள்ளது.