சம்பந்தனின் இறுதி நிகழ்வு

6 months ago




தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனுக்கு இன்று திருகோணமலையில் இறுதி நிகழ்வு இடம்பெற்றது.

கடந்த ஞாயிறன்று காலமான சம்பந் தனின் இறுதி சமயக்கிரியைகள், இலக்கம் 115, அஞ்சல் நிலைய வீதியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி 1.00 மணி யளவில் நிறைவு பெற்றன.

2 மணிக்கு விசேடமாக அமைக்கப்பட்ட மேடையில் அஞ்சலி உரைகள் ஆரம்பமாகின.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவரின் பிரதிநிதி லக்ஸ்மன் கிரியெல்ல, பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ப.அண்ணாமலை, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, ரவூப் ஹக்கீம் எம்.பி., மனோ கணேசன் எம். பி., சித்தார்த்தன் எம்.பி., அருண் தம்பிமுத்து, ஜே.வி.பியின் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் உரையாற்றினர்.

இன்றைய இறுதி நிகழ்வுகளில் இலங்கைக்கான அயல் நாட்டுத் தூதுவர்கள், சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத் தினர்.

மாலை 3.30 மணிக்கு அஞ்சலி உரைகள் நிறைவு செய்யப்பட்டு, தொடர்ந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது.

அஞ்சல் நிலைய வீதி, மின்சார நிலைய வீதி ஊடாக கிறீன் வீதிச் சந் தியை அடைந்து, அங்கிருந்து கல் லூரி வீதிக்கு சென்று, மீண்டும் சோனகர் தெரு ஊடாக இராஜவரோதயம் வீதியை அடைந்து, பின்னர் பிரதான வீதிக்குச் சென்று, அங்கிருந்து கடற்காட்சி வீதி ஊடாக ஏகாம்பரம் வீதிக்கு சென்று இறுதியாக திருகோணமலை இந்து மயானத்தை அடைந்தது.

அங்கு அன்னாரின் மூத்த மகன் ச.சஞ்ஜீவன் சிதைக்கு தீமூட்ட உள்ளார். அன்னாரின் இறுதி ஊர்வலம் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மற்றும் பெருந் தெரு விக்நேஸ்வரா மகா வித்தியாலயம் என்பனவற்றில் பூதவுடலுக்கு விசேட அஞ்சலியை செலுத்த ஏற்பாடுகள் செய் யப்பட்டிருந்தன. இதேவேளை இறுதி ஊர்வலம் செல்லவுள்ள வீதிகளில் உள்ள மக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


அண்மைய பதிவுகள்