திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்டுள்ள பதாகையால் பெரும் பரபரப்பு



வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்டுள்ள பதாகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
"1 கிலோ மீற்றர் வட்டவான் தொல்லியல் நிலையம்" என குறிப்பிட்டு குறித்த பதாகை நடப்பட்டுள்ளது.
இது, அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பகுதியில் எவ்வளவு பகுதி தொல்லியலுக்குள் உள் வாங்கப்பட்டுள்ளது?
அதற்காக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதா? எதிர்காலத்தில் அப்பகுதியில் புத்த விகாரை வருமா? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தொல்லியல் திணைக்களத்தின் குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
கடந்த 28.12. 2024 அன்று இரவோடு இரவாக குச்சவெளிப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தால் பதாகை நடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த முதலாம் திகதியன்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
