அச்சிடப்பட்ட மின்பட்டியல்கள் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.--பொதுச்சேவை ஆணைக்குழு தெரிவிப்பு

அடுத்த கட்ட மின்கட்டண மீளாய்வின் பின்னர் அச்சிடப்பட்ட மின்பட்டியல்கள் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனப் பொதுச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிராமப் புறங்களிலுள்ள மக்கள் மற்றும் கைபேசி இல்லாதோரின் மின்இணைப்புகள் துண்டிக்கப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை மின் பாவனையாளர் சங்கம் பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
அதையடுத்தே பொதுச்சேவை ஆணைக்குழு அடுத்த கட்ட மின் கட்டண மீளாய்வின் பின் அச்சிடப்பட்ட மின்பட்டியல்கள் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
பாவனையாளர்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத் தில் அவர்களுக்கு இலத்திரனியல் பட்டியலை வழங்கலாம் எனவும் பொதுச்சேவை ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
அதேவேளை மின்பட்டியல் அச்சிடுவதற்கு 350 மில்லியன் செலவாகின்றது எனக் கூறப்படும். நிலையில் அந்தக் கட்டணம் பாவனையளர்களின் தலையில் சுமத்தப்படக்கூடாது என மின் பாவனையளர் சங்கத் தலைவர் தம்மிக சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
