இலங்கை மக்கள் தெரிவுசெய்யும் எந்த அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்ற தயார்- இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார்.

4 months ago


இலங்கை மக்கள் தெரிவுசெய்யும் எந்த அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயார் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார்.

கண்டியில் பௌத்தமத தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்

இலங்கை மக்களின் தெரிவுகளை மதிப்பது குறித்த இந்தியாவின் உறுதிப்பாட்டையும்,இரண்டு நாடுகளில் எவர் ஆட்சி செய்தாலும் வலுவான இருதரப்பு உறவுகளை பேணுவது குறித்த உறுதிப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கை மக்களே தெரிவு செய்யவேண்டியவர்கள், இலங்கை தீர்மானிக்கும், இலங்கை மக்கள் தீர்மானிக்கும் எதனையும் நாங்கள் மதிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைய பதிவுகள்