பணம் அச்சடிக்க முடியாது அரச ஊழியர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்- அமைச்சர் பந்துல அறிவுறுத்தல்
2042 ஆம் ஆண்டு வரை பணம் அச்சடிக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்து, அரச ஊழியர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று போக்குவரத்து, நெடுஞ் சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவுறுத்தியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் அபி விருத்திக்கான மக்கள் சந்திப்பு செயல் திட்டத்தின் கீழ் விசேட கூட்டம் வெள்ளிக்கிழமை திரு கோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்ட பத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
பொருளாதார நெருக்கடியிலிருந்து மூச்செடுக்க முடியாத நாட்டைப் படிப்படியாக மீட்டெடுப்பதற்கு, செலவை குறைத்து வருமானத்தை அதிகரிப்பது தொடர்பாகவே அர சாங்கம் சிந்தித்துக் கொண்டி ருக்கின்றது.
இந்த நிலையில் 2042 ஆம் ஆண்டு வரை பணத்தை அச்சடிக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்து, அரச ஊழியர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
2019ஆம் ஆண்டுக்கு முன்னர், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக, அவ்வப்போது பணம் அச்சடிக்கப்பட்டது. ஆனால், இன்று அவ்வாறு செய்ய முடியாது. கடனிலிருந்து நாட்டை முதலில் மீட்க வேண்டும். இதற்காக வருமானத்தை அதிகரித்து அரச செலவுகளை குறைக்க வேண்டும். மக்கள் உயிர் வாழ்வதற்கான, அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய் வதற்கு அதிகமான நிதியைச் செலவு செய்து வருகின்றோம்.
இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்காக ஏற்படுகின்ற செலவை ஏற்றுமதி செய்யப்படு கின்ற பொருட்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ஈடுசெய்ய முடியா துள்ளது. இதுவே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும்- என்றார்.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மொறவெவ விமானப்படை முகாம் வீதி, சிறீ கருமாரி அம்மன் வீதி என்பன திறக்கப்பட்டன. அத்தோடு அம்மன் ஆலயத்தில் அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வழிபாட் டியில் ஈடுபட்டனர்.