யாழ். தென்மராட்சி சாவகச்சேரி கச்சாய் தெற்கு பகுதியில் 80 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் வீதித் தடைகளை ஏற்படுத்தி கார் ஒன்றை சோதனையிட்ட போது 500 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடம் இருந்து 87 கிலோ 616 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கச்சாய் தெற்கு, கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், சந்தேகநபரான பெண் தனது மகனுடன் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து வருவதும், அதற்காகவே கஞ்சா கையிருப்பை வீட்டில் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
