கொழும்பு, கிரேண்ட்பாஸ் வதுல்லவத்த பிரதேசத்தில் ஒருவர் உயிரிழப்பு

5 months ago


கொழும்பு, கிரேண்ட்பாஸ் வதுல்லவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 31 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

அண்மைய பதிவுகள்