கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான இரவுநேர ரயில் சேவை நேற்று முதல் மீண்டும் ஆரம்பம்

2 months ago



வடக்கு ரயில் மார்க்கத்தின் புனரமைப்புப் பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான இரவுநேர ரயில் சேவை நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ரயில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளராக தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்தார்.

வடக்கு ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆளணிப் பற்றாக்குறை காரணமாக குறித்த ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

இருப்பினும் அமைச்சரின் ஆலோசனைக்கமைய ரயில் சேவையை வழமை நிலைக்கு கொண்டுவரும் வகையில், இரவு நேர ரயில் சேவை நேற்று கொழும்பு கோட்டையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கான ஏனைய அனைத்து ரயில் சேவைகளையும் விரைவில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளரான தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்தார்.