வவுனியா உலுக்குளம் ஸ்ரீ சுமன வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் இதன் காரணமாக மாணவர்களுக்கு கற்றல் செயல்பாடுகள் போதிய அளவில் நடைபெறுவதில்லை எனவும் தெரிவித்து பெற்றோர்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று செவ்வாய்க்கிழமை (23) காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஆசிரியர்களை நியமிக்க கோரியும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் செயல்படக் கோரியும் பதாகைகளை தங்கி இருந்தனர்.
சுமார் ஒன்றரை மணி நேரமாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.