தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதிக்கு மனு வழங்கப்பட்டுள்ளது

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் எந்தத் தாமதமும் இல்லாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு மனு வழங்கப்பட்டுள்ளது.
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில்,சுமார் 18 ஆயிரம் கையொப்பங்களுடன் இந்த மனு ஜனாதிபதியின் கவனத்துக்காகவும், உடனடி நடவடிக்கைக்காகவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
எங்களின் துயரத்தின் அளவு குறித்து உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை என நாங்கள் கருதுகின்றோம்.
இந்த நாடு ஆட்சி செய்யப்படும் முறையை மாற்றுவதற்காக, இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான தோழர்களை இழந்த புரட்சிகர அரசியல் பாரம்பரியத்தால் வளர்க்கப்பட்ட நீங்கள்.
இதன் காரணமாக மிகவும் கொடுமையான மோசமான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட துயரமான வரலாற்று அனுபவம் உங்களுக்கு உள்ளது.
இலங்கைத் தமிழ் மக்களாகிய நாங்கள் வன்முறைக் கலாசாரம் மற்றும் ஆயுத மோதல்கள் மீது விருப்புக்கொண்டவர்கள் அல்லர்.
பேராசையும் புரிந்துணர்வும் இல்லாத சிங்கள ஆட்சியாளர்களால் நாங்கள் அவ்வாறான மோதல்களில் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டோம்.
எங்கள் இளம் தலைமுறையினர் அரசியல் கொள்கைகளுக்காகப் போராடினார்கள்.
சொத்துச் சேர்ப்பது, ஏனைய மக்களினத்தை அடிபணியச் செய்வது போன்ற பேராசை நோக்கங்களுக்காக அவர்கள் போராடவில்லை.
அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை நாங்கள் பெரும் நம்பிக்கையுடன் சமர்ப்பிக்கின்றோம்.
உங்களுடைய தீர்மானம் தங்கள் நேசத்திற்குரியவர்களுடன் சேர்வதற்காக பல வருடங்களாக காத்திருக்கும் பெற்றோரினதும் குடும்பத்தவர்களினதும் கண்ணீரை நிறுத்தும் வகையில் அமைய வேண்டும் - என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
