கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிட, தனக்கு ட்ரூடோவின் லேபர் கட்சி அனுமதி மறுத்த செய்தி மக்களை கோபமடையச் செய்துள்ளது

2 months ago



கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிட, தனக்கு ட்ரூடோவின் லேபர் கட்சி அனுமதி மறுத்து விட்டதாக இந்திய வம்சாவளியினரான நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ள செய்தி மக்களை கோபமடையச் செய்துள்ளது.

கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தான் கனடா பிரதமர் பதவிக்காக போட்டியிட இருப்பதாக இந்திய வம்சாவளியினரான சந்திரா ஆர்யா தெரிவித்திருந்தார்.

2015 ஆம் ஆண்டு முதல் கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஆர்யா, இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்நிலையில், திடீரென ஆர்யா சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்று மக்களை கோபமடையச் செய்துள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோவின் லேபர் கட்சி, கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிட, தனக்கு அனுமதி மறுத்துவிட்டதாக ஆர்யா தெரிவித்துள்ளார்.

எதனால் ஆர்யாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், ஆர்யாவை போட்டியிட விடாமல் தடுப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என கனேடிய மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

நீங்கள் கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடக்கூடாதென்றால், உங்களை எதற்காக நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் அனுமதித்தார் என கேள்வி எழுப்பியுள்ளார் ஒருவர்.

மற்றொருவரோ, இவர்கள் தேர்ந்தெடுக்கவேபடாத ஒரு வங்கியாளரை பிரதமருக்கான போட்டியில் அனுமதிப்பார்கள், ஆனால், அதே கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவரை அனுமதிக்கமாட்டார்களா என்று கேட்கிறார் ஒருவர்.

கனடா வரலாற்றிலேயே ஜனநாயகத்துக்கு எதிரான கட்சி என்றால் அது லிபரல் கட்சிதான் என்றும் ஒருவர் தெரிவித்துள்ளார்.