ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு மீண்டும் இலங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நியூயோர்க்கில் இடம்பெற்ற வாக்கெடுப்பின்போது இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலதிகமாக 07 வாக்குகள் கிடைக்கப் பெற்று இலங்கைக்கு மொத்தமாக 182 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டது.
சபையின் உறுப்பினராக, வறுமை ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவம் உள்ளிட்ட திட்டங்களுக்கு இலங்கை பங்களிப்பதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
