யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த ஒருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த ஒருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்.ஈச்சமோட்டை வீதி, சுண்டுக்குளி பகுதியைச் சேர்ந்த மைக்கல் அன்ரன் சுரேந்திரன் (வயது 70) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் மனைவி லண்டனிலும், பிள்ளைகள் கொழும்பிலும் வசித்து வரும் நிலையில், உயிரிழந்த நபர் சகோதரியின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இருப்பினும், கடந்த வாரங்களாக அவர் குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளார். அவரை கைப்பேசியில் அழைத்த நண்பர் அவரை தொடர்புகொள்ள முடியாத காரணத்தால் விடுதிக்கு வந்து அறை கதவினை திறந்து பார்த்தவேளை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கமைய, அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
