தமிழர்களின் புனித மாதமான நவம்பர் மாதத்தில் சூரிச் சிவன் கோவில் சைவத்தமிழ் சங்கத்தின் அன்பேசிவ இளம் தொண்டர் சபையின் நிதி அனுசரணையில் வரப்புயர மரநடுகையின் ஆரம்ப நிகழ்வு முகமாலையிலுள்ள சிவபுர வளாகத்தில் நடைபெற்றது.
இதேவேளை, வரப்புயர திட்டத்தின் கீழ் முகமாலை கிராம மக்களுக்கு மரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இக்கிராமத்தில் யுத்த காலத்தில் அதிக மரங்கள் அழிவுற்றன.
அதனால் பயன்தரு மரங்களை மீண்டும் நாட்டுவதன் மூலம் கிராம மக்கள் முன்னேற்றத்தை காண்பார்கள் என்ற நல்ல எண் ணத்துடன் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் அன்பே சிவ தாயக இணைப்பாளர், நிர்வாகத்தினர், தொண்டர்கள், பணியாளர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்.
எதிர்வரும் நாட்களில் கிழக்கு மாகாணத்திலும் பின்னர் வடக்கு மாகாணத்திலும் மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளன.